எதிர்கால உலகிற்குப் பொருத்தமான ஆளுமையுடைய தரமான சமுதாயத்தை உருவாக்கும் உயரிய பணியை பாடசாலைகள் செய்ய வேண்டும். இதற்கு அமைவாக இங்கு கற்கும் அனைத்து மாணவச் செல்வங்களையும் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றில் நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் உள்ளவர்களாக்கும் எமது பணி வினைத்திறனுடையதாக அமைந்து எதிர்பார்க்கும் சிறந்த வினைத்திறனை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் செயலாற்றுகின்றோம்.
10.02.1978 இல் ஆராம்பிக்கப்பட்ட இப்பாடசாலை அமைவிடமும் பாடசாலைச் சமூக ஒத்துளைப்பும், கடந்தகால வினைத்திறனான செயற்பாடுகளாலும் உன்னத நிலையை அடைந்துள்ளது.
மேலும் நவீன காலத்தின் தேவைக்கேற்ப மாணவர்களை உருவாக்கக் கூடிய வளங்கலான கற்றல் கற்பித்தல் சாதனங்களும் இடவசதிகளும் தேவையாக உள்ளது.
ஆங்கிலம், கணிதம், விஞ்ஞான துறைகளிளும் மனபாங்கு விருத்தியிலும் மேலும் பல முன்னேற்றங்களை நோக்கி கடினமாக உழைக்க வேண்டிய தேவைப்பாடு உண்டு. நவீன உலகிற்கேற்ப நல்ல சமுதாய உருவாக்கத்திற்கு பெற்றோர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், கல்வித்திணைக்களத்தினர், அரச - அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகம் உறுதுணை புரிய வேண்டுமென அன்பான வேண்டுதலுடன் செயற்படுகின்றோம்.
நன்றி
